20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, கடலூர் உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நள்ளிரவு 1 மணிவரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தென்காசி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், கோவை, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவள்ளூர், சென்னை, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com