கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே நேற்று (24ம் தேதி) தொடங்கிவிட்டது. 16 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

இதனிடையே, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (26ம் தேதி - திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, காரச்கோடு ஆகிய 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com