சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை

மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது
சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
Published on

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு லேசான மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com