இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்?

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்?
Published on

மத்தியமேற்கு மற்று அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.

தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சு நிலவுகிறது. தெற்கு கொங்கன் - வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com