தமிழ்நாட்டில் 4 இடங்களில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவு

தமிழ்நாட்டில் 4 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 4 இடங்களில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த பரவலான மழை காரணமாக வெப்பம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இந்த வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 101 டிகிரி, திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com