இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 4 பேரை விடுதலை செய்த ஹமாஸ் ஆயுதக்குழு

இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 4 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்தது.
இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 4 பேரை விடுதலை செய்த ஹமாஸ் ஆயுதக்குழு
Published on

காசா முனை,

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈராக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பெண்களை கடந்த 19ம் தேதி விடுதலை செய்தது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 90 பேரை இஸ்ரேல் விடுதலை செய்தது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 4 பெண்களை இன்று விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் பணியாற்றிய வீராங்கனைகள் ஆவார்.

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலில் இருந்து 250க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக காசா முனைக்கு கடத்தி சென்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். அதேவேளை, இன்னும் 90க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் மொத்தம் 33 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஆயுதக்குழு ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தற்போதுவரை மொத்தம் இஸ்ரேலிய பணய கைதிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 4 இஸ்ரேலிய பெண் பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்துள்ள நிலையில் அதற்கு ஈராக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 200 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com