பாகிஸ்தான்: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான்: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி
Published on

லாகூர்,

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை அழிக்க பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டரி இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் , ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தினர் பதிலடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com