நடுவானில் விமானத்தில் பற்றி எரிந்த தீ - வைரல் வீடியோ

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை
நடுவானில் விமானத்தில் பற்றி எரிந்த தீ - வைரல் வீடியோ
Published on

பீஜிங்,

சீனாவின் செஜியாங் மாகாணம் காங்சூ நகரில் இருந்து தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு இன்று காலை ஏர் சீனா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைக்கு மேல் அமைந்திருந்த உடைமை வைக்கும் பகுதியில் தீடிரென தீப்பற்றி எரிந்தது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விமான பணியாளர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை

இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக ஷாங்காய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பயணி தனது பையில் வைத்திருந்த லித்தியம் பேட்டரி சூடாகி தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com