திபெத்தில் தொடரும் நிலநடுக்கம்: ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி

இரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,
திபெத்தில் தொடரும் நிலநடுக்கம்: ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி
Published on

பீஜிங்,

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், திபெத்தில் நேற்று ஒரே இரவில், 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com