பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; 4 போலீசார் பலி

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; 4 போலீசார் பலி
Published on

லாகூர்,

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டம் லகி மார்வாட் , மண்டன் ஆகிய 2 பகுதிகளில் போலீசாரை குறிவைத்து மர்ம நபர்கள் இன்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 போலீசார் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com