15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் மாண்ட்கோமரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பின் 15-வது மாடியில் 2 வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பால்கனியின் இடைவெளி வழியாக அந்த குழந்தை கீழே விழுந்தது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாததால் அங்கு சென்று தாய் பார்த்தார். அப்போது பால்கனி வழியாக குழந்தை கீழே விழுந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அதிர்ஷ்டவசமாக அருகில் உள்ள புதரில் குழந்தை கிடந்தது. இதனையடுத்து குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com