குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்த போலீஸ் தம்பதி கைது

அமெரிக்காவில் குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்த போலீஸ் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்த போலீஸ் தம்பதி கைது
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணம் ஹாமில்டன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் டிபியாசி (வயது 39). இவரது மனைவி எலிசபெத் (42) மெர்சர் பிராந்திய போலீஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களது செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது 1,000-க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் அவர்களது செல்போனில் எடுக்கப்பட்டன. அவற்றில் பல புகைப்படங்களில் அந்த குழந்தைகளும் இருந்தனர். இதனையடுத்து போலீஸ் தம்பதி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com