

ஜகார்த்தா,
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை 10.26 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் 16 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து இலங்கையில் கடலோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றபோதிலும், கடலோரத்தில் இருக்க கூடிய இலங்கைவாசிகள் கவனத்துடன் இருக்க கேட்டு கொள்ளப்பட்டனர்.
எனினும், அனைத்து கடலோர பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன என இலங்கையின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.