இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக சீனா பயணம்

4 நாள் பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக சீனா பயணம்
Published on

கொழும்பு, 

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக கடந்த மாதம் வந்திருந்தார். அதிபரக பதவியேற்ற பின்பு முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகை தந்தார். இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியைச் சந்தித்து திசநாயக பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், மீனவர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருதரப்பு உறவு குறித்து இருவரும் உரையாடினர்.

இந்த நிலையில், 4 நாள் பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபரின் அழைப்பை ஏற்று அநுர குமார திசநாயக இலங்கைக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் சீன அதிபர் ஜி ஜின்பிங் , சீன பிரதமர் லி கியாங் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com