ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.6, 5.2 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
Published on

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

160 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.36 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்து 1.58 மணியளவில் திடீரென மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. 180 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.32 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com