எளிய முறையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?

எளிய முறையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?

Published on
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : தித்திப்பான மாம்பழக் கூழ், சர்க்கரை, பால், அரிசிக்குருணை, கேசரி பவுடர், நெய், முந்திரி, திராட்சை, கண்டென்ஸ்டு மில்க், மேங்கோ எசன்ஸ், ஏலக்காய்த்தூள் ஆகியவை.
செய்முறை : முந்திரி, திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.
மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
அரிசி நன்றாக வெந்து, பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
இந்த மாம்பழ பாயாசத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com