இன்றைய ராசிபலன் - 01.01.2025

இன்றைய ராசிபலன் - 01.01.2025

Published on
மேஷம் : எதிர்பார்ப்புகள் ஈடேறும். பிள்ளைகளின் புது முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம் : புதிய நண்பர்கள் கிடைப்பர். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. திருமணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கும். பணவரவில் பஞ்சமில்லை. காதல் கசக்கும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிருங்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் கையாள்வீர்கள்.
மிதுனம் : மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
கடகம் : பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேற்படிப்பிற்கு ஆயத்தம் ஆவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் வலி வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் குறையும்.
சிம்மம் : வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம்.
கன்னி : முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர்.
துலாம் : கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணப்பற்றாக்குறை நீங்கும்.
விருச்சிகம் : கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முகத் தோற்றம் பளிச்சிடும்.
தனுசு : அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். அரசு ஊழியர்களுக்கு, தலைமைப் பதவி கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சி வெற்றிபெறும்.
மகரம் : வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும்.
கும்பம் : உடல் நலம் பலம் பெறும். வேலைதேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். எதிரிகள் சரணடைவர். நண்பர்கள் உதவுவர். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில்.அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர்.
மீனம் : பிள்ளைகள் நன்கு படிப்பர். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் லாபத்தை காண்பீர்கள். வாகனம் ஓட்டும் போது விவேகத்தை வளப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தம்பதிகளிடத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். பணவரவு நன்றாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com