தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்க பயன்படும் வால்நட் எண்ணெய்!

தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்க பயன்படும் வால்நட் எண்ணெய்!

Published on
மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை குணப்படுத்த, வால்நட் எண்ணெய்யை ஏதேனும் ஒரு மூலிகை எண்ணெய்யுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம்.
பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும்.
வால்நட் எண்ணெய்யை தலைப்பகுதியில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும்.
மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.
புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வால்நட் எண்ணெய்யில் இருக்கும் சத்துக்களுக்கு உண்டு. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலும் வால்நட் எண்ணெய்க்கு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com