பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினம்!

தினத்தந்தி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை போன்றவை பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள்.

பெண்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குடும்பத்தினரும் சமூகமும் ஆதரவாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

ஓடும்போது கால் எலும்பில் வலி ஏற்படுகிறதா? ஏன் தெரியுமா?