10 நிமிடத்தில் சுவையான சேமியா பால் பாயாசம்!

தினத்தந்தி

தேவையான பொருட்கள்:

  • சேமியா – ½ கப்

  • பால் – 1 லிட்டர்

  • சர்க்கரை – ½ கப் (தேவைக்கேற்ப)

  • நெய் – 2 டீஸ்பூன்

  • முந்திரி – 10

  • உலர் திராட்சை – 10

  • ஏலக்காய்த் தூள் – ¼ டீஸ்பூன்

1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்

அதே நெய்யில் சேமியாவைச் சேர்த்து, மிதமான தீயில் (Low Flame) சேமியா பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். (வறுத்த சேமியாவாக இருந்தால் 1 நிமிடம் லேசாக வறுத்தால் போதும்).

மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பால் கொதித்ததும், வறுத்த சேமியாவை பாலில் சேர்த்து மிதமான தீயில் 6–8 நிமிடங்கள் வேகவிடவும். சேமியா மிருதுவாக வெந்துவிடும்.

சேமியா நன்கு வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை 2–3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இறுதியாக ஏலக்காய்ப் பொடி மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

சேமியா பாயாசம் ஆற ஆற கெட்டியாகும். பாயாசம் அதிகக் கெட்டியானால், பரிமாறுவதற்கு முன் சிறிதளவு காய்ச்சிய சூடான பாலை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம்

மொறுமொறுப்பான மெதுவடை வீட்டிலேயே செய்வது எப்படி?