மொறுமொறுப்பான மெதுவடை வீட்டிலேயே செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள் : உளுத்தம் பருப்பு – 1 கப் ,பச்சை மிளகாய் – 2 ,இஞ்சி – சிறிய துண்டு ,சின்ன வெங்காயம் – 8 முதல் 10 ,கறிவேப்பிலை – சிறிதளவு ,மிளகு – ½ தேக்கரண்டி ,சீரகம் – ½ தேக்கரண்டி , உப்பு – தேவையான அளவு ,எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு

உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி 2–3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

தண்ணீரை வடித்துவிட்டு, மிகக் குறைந்த தண்ணீர் சேர்த்து கெட்டியாகவும் மென்மையாகவும் அரைக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

கையை ஈரமாக்கி மாவை எடுத்து உருண்டையாக்கி, நடுவில் துளையிட்டு வடையாக உருவாக்கவும்.

மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் வடைகளை மெதுவாக விடவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

வடைகளை எண்ணெயிலிருந்து எடுத்து, தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

சுவையான மெது வடை !

தேசிய ஆப்பிள் தினம்!