10 கீரைகளும்..அதன் பயன்களும்.!!

தினத்தந்தி

கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் 10 வகையான கீரைகளையும், அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களையும் அறிந்து கொள்ளலாம்.

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சப்போட்டா பழத்தின் வரலாறும்..அதன் சிறப்புகளும்.!