சப்போட்டா பழத்தின் வரலாறும்..அதன் சிறப்புகளும்.!

தினத்தந்தி

வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’ என்றும் கூறப்படுகிறது.

தாவர இயல் பெயர், அக்ரஸ் சப்போட்டா. சப்போட்டேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த சப்போட்டாவிற்கு, அமெரிக்கன்ஸீபுல்லி என்று ஒரு சிறப்புப்பெயர் உண்டு.

இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு சப்போட்டா மாநிலம் என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.

மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பரப்பளவில் சப்போட்டா பயிரிடப்படுகிறது.

நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி., இரும்புச் சத்து 2.0 மி.கி., தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோபிளவின் 0.03 மி.கி., நியாசின் 0.02 மி.கி., வைட்டமின் சி 6.1 மி.கி.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்.

தினமும் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இருதயம் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?