மனதை குளிர்விக்கும் இந்தியாவின் 3 முக்கிய சுற்றுலா தலங்கள்!

தினத்தந்தி

டார்ஜிலிங்: மேற்கு வங்காளத்தில் அமைந்திருக்கும் டார்ஜிலிங், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 8,586 மீட்டர் உயரம் கொண்ட கஞ்சன் ஜங்கா மலைச்சிகரம் கம்பீரமான தோற்றத்துடன் கவர்ந்திழுக்கும்.

Photo: wikipedia

திரும்பிய பக்கமெல்லாம் பச்சை பசேல் என படர்ந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் எழுப்பும் வாசம் திக்குமுக்காட செய்துவிடும். தேயிலை பானங்களை விரும்பாதவர்கள் கூட அதனை ருசித்து பார்ப்பதற்கு ஆர்வமாகிவிடுவார்கள்.

Photo: wikipedia

இயற்கையின் சொர்க்க பூமியாக விளங்கும் இங்கு சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. இயற்கை நேசர்களுக்கு பிரியமான இடமாக இது விளங்குகிறது.

Photo: wikipedia

அந்தமான் மற்றும் நிக்கோபார்; கோடையில் பெரும்பாலும் கடற்கரைகள் கவர்ச்சிகரமாக தெரியாது. மதிய வேளையில் அனல் காற்று வீசக்கூடும். ஆனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த எண்ணம் நிச்சயமாக மாறிவிடும்.

Photo: wikipedia

சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தும் சாகச விளையாட்டுகள் அங்கு ஏராளம் இருக்கின்றன. மணற்பாங்கான கரையோரங்களில் வெயிலை மறந்து ஓய்வெடுக்க தூண்டும் காலநிலை அங்கு நிலவும்.

Photo: wikipedia

கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும் ஏற்ற இடமாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் அமைந்திருக்கின்றன. வெப்பமண்டல கால நிலையில் விளையும் பழங்கள் மற்றும் இளநீரை சுவைத்துக்கொண்டே கடற்கரை அழகை ரசித்தபடி கோடை விடுமுறையை அனுபவித்துவிட்டு வரலாம்.

Photo: wikipedia

மணாலி; பனி மூடிய மலைகள் இந்தியாவின் பிரபலமான கோடை கால இடங்களில் ஒன்றாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி விளங்குகிறது. இங்கு நிலவும் கால நிலையும், இயற்கை அழகும், சாகச பயணங்களும் கோடை விடுமுறையை மறக்க முடியாத நாட்களாக மாற்றிவிடும்.

Photo: wikipedia

இந்த அழகிய நகரம் பனி மூடிய மலை சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. கோடையை குளிர்ச்சியான சூழலில் கொண்டாட காரணமாக அமைந்திருக்கிறது. அங்கு ஓடும் பியாஸ் நதி பசுமை படர்ந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

Photo: wikipedia

மலையேற்றம், ரிவர் ராப்டிங், பாராகிளைடிங், சோர்பிங் உள்பட அனைத்து வகையான சாகச அனுபவங்களையும் ஒரே இடத்தில் அனுபவித்து விடலாம். பனிகளுக்கு மத்தியில் உற்சாகமாக விளையாடி பொழுதை இனிமையாக கழிக்கலாம்.

Photo: wikipedia
கேரளாவில் மட்டும் கிடைக்கும் மறக்கமுடியாத அனுபவங்கள்!