தினத்தந்தி
மலைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள் என இந்தியாவின் அழகிய மாநிலமாக கேரளா திகழ்கிறது. அங்கு மட்டுமே கிடைக்கும் தனித்துவமான அனுபவங்கள் இதில் பார்க்கலாம்
படகு வீடு - ஆலப்புழா அல்லது குமரகம் போன்ற இடங்களில், பாரம்பரிய படகு வீடுகளில் தங்கி அமைதியான நீர்நிலைகளில் பயணம் செய்வது அற்புதமான, மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.
பாம்பு படகு சவாரி - ஓணம் திருவிழாவின்போது நடைபெறும் இந்த விளையாட்டில், பாம்பைப் போன்று நீண்ட படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் துடுப்புப் போட்டு வருவது கண்கொள்ளாக் காட்சி.
கதகளி & களரிப்பயட்டு: பாரம்பரிய நடனமான கதகளி மற்றும் தற்காப்புக் கலையான களரிப்பயட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.
சத்யா உணவு - கேரளாவின் பாரம்பரிய அறுசுவை விருந்தாகும், இது ஓணம் போன்ற பண்டிகைகளின் போது வாழை இலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட சைவ உணவுகளைப் பரிமாறுவார்கள்
மர வீட்டில் தங்குவது - மர வீட்டில் தங்குவது இயற்கையுடன் ஒன்றிணைந்த, சாகசமான அனுபவத்தைத் தரும்; இது காடு, மலைகள், அருவிகள் சூழ அமைந்திருக்கும். இந்த அனுபவம் வயநாட்டில் சாத்தியமாகும் .
நீளமான ஜிப்லைன் - இந்தியாவின் நீளமான ஜிப்லைன் மூணாறில் உள்ளது. பசுமையான நிலப்பரப்பை வானில் பறந்தப்படி கண்டு ரசிக்கலாம்.