தினத்தந்தி
தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயன் தருகிறது. இது உடல் அமைப்பை மேம்படுத்தவும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதால் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறை வேகமாகி, தேவையற்ற கொழுப்பு குறைகிறது.
இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது. உடல் ஆற்றல் அதிகரித்து, மனநிலை மேம்படுகிறது.
ரத்த ஓட்டம் சீராகி, உடல் பருமன் கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும், சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்தால் வைட்டமின் டி கிடைக்க உதவும்.
தூக்க தரம் மேம்பட்டு, உடல் சமநிலை பேணப்படுகிறது. வாழ்க்கை தரமும் உயர்கிறது.