பளபளக்கும் கூந்தலுக்கான 6 முக்கிய ஊட்டச்சத்துகள்

தினத்தந்தி

அடர்த்தியான, வலிமையான மற்றும் பளபளப்பான கூந்தலை விரும்பாத பெண்கள் எவருமில்லை. அதற்கு கூந்தல் விரும்பும் 6 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உணவில் தவறாமல் இடம் பெற செய்ய வேண்டும்.

Photo: magnific

பயோட்டீன்: கூந்தலை வலிமைப்படுத்த உதவும் பயோட்டின். முட்டை, பாதாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மிகுந்துள்ளது.

Photo: magnific

ஒமேகா-3: உச்சந் தலை ஆரோக்கியத் திற்கும், கூந்தல் பள பளப்புக்கும் ஒமேகா-3 உதவிடும். சியா விதைகள், ஆளி விதைகள், சால்மன் மீன்கள் ஆகிய வற்றை உட்கொண்டு வரலாம்.

Photo: magnific

வைட்டமின் சி: இரும்பு உறிஞ்சுதலுக்கும், கொலாஜனை மேம்படுத்துவதற்கும் வைட்டமின் சி உதவிடும். முடியின் ஆரோக்கியத்தையும் காக்கும். அதற்கு ஆரஞ்சு, பப்பாளி, கிவி ஆகிய பழங்களை உட்கொள்ளலாம்.

Photo: magnific

இரும்புச்சத்து: கூந்தலின் மயிர்க்கால்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி செல்வதற்கு இரும்புச்சத்து தேவைப்படும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகளை உட்கொள் வதன் மூலம் இரும்புச்சத்தை பெறலாம்.

Photo: magnific

துத்தநாகம்: முடி வளர்ச்சிக்கும், முடியில் ஏற்படும் சேதத்தை சீர் செய்வதற்கும் துத்தநாகம் உதவிடும். பூசணி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது முடிக்கு பலம் சேர்க்கும்.

Photo: magnific

புரதச்சத்து: முடி முழுக்க 'கெரட்டின்' என்ற புரதத்தால் ஆனது. எனவே, முட்டை, மீன், பருப்பு வகைகள் மற்றும் தயிர் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Photo: magnific
சத்தான கோதுமை ரவைக் கஞ்சி செய்வது எப்படி?