தினத்தந்தி
சிறுநீரக கற்கள்; சிறுநீரக கற்கள் என்பவை சிறுநீரில் உள்ள கால்சியம், யூரிக் அமிலம் போன்ற தாதுக்கள் மற்றும் உப்புகள் படிந்து உருவாகும் கடினமான படிகங்கள் ஆகும். குறைந்த நீர்ச்சத்து, தவறான உணவுமுறை மற்றும் உடல் பருமன் காரணமாக இவை உருவாகின்றன.
சிறுநீர் கழிப்பதில் சிரமம்: அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, அல்லது சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுதல்.
கடுமையான வலி: முதுகுவலி மற்றும் பின்பக்க விலா எலும்பில் அதிகப்படியான வலியை சந்திக்கின்றனர். சிறுநீரக பாதையில் இந்த கற்கள் பயணிக்கும் போது உண்டாகும் அழுத்தம், இந்த அதீத வலிக்கு காரணமாகிறது.
சிறுநீரில் ரத்தம்: சிறுநீரக கற்கள் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், சிறுநீர் கழிக்கையில் இரத்தம் சேர்ந்து வெளியேறுகிறது. மேலும் இந்த ரத்தம் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.
குளிர் காய்ச்சல்: சிறுநீரக கற்கள் கொண்டவர்கள் பெரும்பாலும் குளிர் காய்ச்சல் போன்ற பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர்.
குறைவான சிறுநீர்: சிறுநீர் பாதையில் கற்கள் ஏற்படுத்தும் அடைப்பு, சிறுநீர் அளவு கணிசமாகக் குறையும் அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.
குமட்டல், வாந்தி: சிறுநீரக கற்கள் கொண்டவர்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி வருவது இயல்பான விஷயம் ஆகும். அடிவயிற்று வலி காரணமாக குமட்டல் மற்றும் வாந்திக்கு வழி வகுக்கிறது.