வாதத்தை அதிகப்படுத்தும் கொத்தவரங்காய்!

தினத்தந்தி

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம், வைட்டமின் C மற்றும் இரும்புச்சத்து போன்றவை இதில் அதிகமாக உள்ளன.

வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரும்புச்சத்து இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் A ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின் A கண்பார்வையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) வயிற்றுப் புண் ஏற்படுவதிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகின்றன.

வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுபவர்கள் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு ஏற்படலாம். அதனால் எடுத்துக்கொள்ளும் மருந்தின் செயல்திறன் குறைய வாய்ப்பு உள்ளது.

கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

மேலும், கொத்தவரங்காய் ரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காது. அதனால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் உணவாகவும் கருதப்படுகிறது.

நீரிழிவு முதல் புற்றுநோய் வரை.. மா இலையில் இவ்வளவு நன்மைகளா?