முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 வகையான உணவுகள்!

தினத்தந்தி

நமது நாட்டில் சுமார் 25 முதல் 30 சதவீதம் பேர் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான அளவில் உண்பதன் மூலம் இத் தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்

credit: freepik

தாவர புரதம் - சியா விதைகள், பருப்பு வகைகள், பீன்ஸ், பாதாம் போன்றவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்களை கொண்டுள்ளன.

credit: freepik

கடல் உணவுகள் - கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் தண்டுவட ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். மேலும் திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

credit: freepik

பால் பொருட்கள் - முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் பொருட்களை உட்கொள்வது அவசியமானது. எலும்புகள் கால்சியத்தால் ஆனது. பாலிலும் கால்சியம் இருப்பதால் அதனை உட்கொள்வது முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

credit: freepik

காய்கறிகள் - முட்டைக்கோஸ், புரோக்கோலி மற்றும் கீரை ஆகியவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டவை. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

credit: freepik

பழங்கள் - இவைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முதுகெலும்பு பகுதியை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும். பெர்ரி வகை பழங்களை உட்கொள்வது முதுகெலும்புக்கு நலம் சேர்க்கும்.

credit: freepik

மசாலாப் பொருட்கள் - இஞ்சி, துளசி, ரோஸ்மேரி, லவங்கப்பட்டை போன்ற மூலிகை மற்றும் மசாலாப் பொருட்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சில மருந்துகளில் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. மசாலாப் பொருட்கள், மூலிகைகளை பயன்படுத்தி டீ தயாரித்தும் பருகலாம்.

credit: freepik
இதய நோய்களை தடுக்கும் மெடிட்டரேனியன் உணவுமுறை!