இதய நோய்களை தடுக்கும் மெடிட்டரேனியன் உணவுமுறை!

தினத்தந்தி

மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம், கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தும் உணவு முறையாகும். இவ்வகை உணவிலிருந்து கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.

credit; freepik

இதய ஆரோக்கியம் - இந்த உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைவாக இருப்பதற்கான சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

credit; freepik

தூக்கம் - இது ஆரோக்கியமான தூக்கமுறைக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுமுறை தூக்கத்தை மேம்படுத்தும் என்றும், தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறதும் என்று கூறப்படுகிறது.

credit; freepik

புற்றுநோய் எதிர்ப்பு - இதில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்துள்ளன. இவை சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.

credit; freepik

மன ஆரோக்கியம் - இந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கின்றன. மனச்சோர்வை குறைக்கின்றன.

credit; freepik

நீரிழிவு நோய் - இந்த உணவைப் பின்பற்றுபவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் இந்த உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

credit; freepik

முதலில் உணவுமுறையில் பழங்களை சேர்க்க தொடங்குங்கள். பின்னர் புரோக்கோலி அல்லது கேரட் போன்ற காய்கறிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து தானிய வகைகளை உணவில் சேர்க்க தொடங்குங்கள். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

credit; freepik

சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு, பன்றி இறைச்சி) சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக மீன் மற்றும் மற்ற கடல் உணவுகளை சாப்பிடுங்கள். இந்த சிறிய மாற்றங்கள் காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

credit; freepik
தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்!