தினத்தந்தி
இட்லி - எளிதில் செரிமானமாகும் இட்லி, காலையில் சாப்பிட ஏற்ற உணவு. சாம்பார் சேர்த்துச் சாப்பிட்டால் புரதமும் கூடுதலாகக் கிடைக்கும்.
ஓட்ஸ் - நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவுகிறது. பால் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
முட்டை - புரதம் நிறைந்த முட்டை, தசைகளைப் பராமரிக்கவும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறவும் உதவுகிறது.
கம்பு அல்லது கேழ்வரகு கஞ்சி - சிறுதானியக் கஞ்சியில் நார்ச்சத்தும் பல்வேறு தாதுச்சத்துகளும் கிடைக்கின்றன. சர்க்கரை சேர்க்காமல் அல்லது குறைவாகச் சேர்த்துச் சாப்பிடலாம்.
பழங்கள் - வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்கள் வைட்டமின்கள், தாதுச்சத்துகள் மற்றும் நார்ச்சத்தை வழங்குகின்றன
கொண்டைக்கடலை - வேகவைத்த கொண்டைக்கடலையில் புரதமும் நார்ச்சத்தும் உள்ளன. காலை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
தோசை மற்றும் சாம்பார் - தோசையுடன் சாம்பார் சேர்த்துச் சாப்பிடும்போது மாவுச்சத்து, புரதம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன
நட்ஸ் மற்றும் விதைகள் - பாதாம், வால்நட், பூசணி விதைகள் போன்றவற்றில் நல்ல கொழுப்புகள், புரதம் மற்றும் தாதுச்சத்துகள் உள்ளன. சிறிய அளவில் காலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.