இட்லி கல்லு மாதிரி ஆகிறதா? இந்தச் சின்ன தவறுகளைத் தவிருங்கள்!

தினத்தந்தி

நல்ல தரமான உளுந்தம்பருப்பு மற்றும் இட்லி அரிசியைப் பயன்படுத்த வேண்டும்.

அரிசி, உளுந்து ஆகியவற்றை 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்வது பொதுவான முறையாகும்.

அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும்.

மாவு அரைக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினால், மாவு அதிகமாகச் சூடாவதைத் தவிர்க்கலாம்.

உளுந்தை நன்றாகவும் வழுவழுப்பாகவும் அரைக்க வேண்டும். அரிசியைச் சற்று கரகரப்பாக அரைக்கலாம்.

அரிசி அரைக்கும்போது ஒரு கைப்பிடி அவல் சேர்த்தால் இட்லி மிருதுவாகக் கிடைக்க உதவும். உளுந்து ஊறும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்தால், மாவு நன்றாகப் பொங்க உதவும்.

மாவு மிகவும் கெட்டியாகவோ, அதிக நீர்த்தன்மையுடனோ இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.

மாவைக் கையால் நன்றாகக் கலந்து, வெப்பமான இடத்தில் சுமார் 8 முதல் 10 மணி நேரம் புளிக்க வைக்கலாம். புளிக்கும் நேரம் சுற்றுப்புற வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.

மாவு புளித்த பிறகு அதிகமாகக் கிளற வேண்டாம். இதனால் மாவில் உள்ள காற்றுத் தன்மை ஓரளவு தக்கவைக்கப்படும். இட்லித் தட்டுகளில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை ஊற்ற வேண்டும்.

மாவை இட்லித் தட்டில் ஊற்றியதும், ஏற்கெனவே கொதிக்கும் நீருடன் தயாராக இருக்கும் இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைக்க வேண்டும். இதனால் மென்மையான இட்லி கிடைக்க உதவும்.

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற சுவையான வஞ்சிரம் மீன் வறுவல்!