தேவையான பொருட்கள்: தேங்காய் -1, மில்க்மெய்டு - 1 டின், தண்ணீர் - 4 கப், ஜெலட்டின் - 3 டீஸ்பூன், வெனிலா - 1 தேக்கரண்டி.செய்முறை: முதலில் ஒரு தேங்காயை எடுத்து அரைக்கவும். அடுத்து, தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து தேங்காயை நன்கு பிழிந்து கொள்ளவும்..அதன் பிறகு தேங்காய்த் தூள் போகாதவாறு முதல் தேங்காய்ப் பாலை நன்றாக வடிகட்ட வேண்டும். தொடர்ந்து அதை, மில்க்மெய்டு பாலுடன் கலந்து கரைக்கவும்..வெதுவெதுப்பான நீரில் ஜெலட்டினை நன்கு கரைத்து, தேங்காய்ப் பால் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும் ..அடுத்து, கலவை கட்டியாகும் வரை சுமார் நான்கு மணி நேரம் குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைக்க வேண்டும்..பிறகு குளிர்பதன பெட்டியில் இருந்து எடுத்து, பீட்டரால் அடிக்கவும். பின்னர் அதில் சிறிது வெனிலா சேர்க்கவும்..கடைசியாக இதை மீண்டும் குளிர்பதன பெட்டியில் வைத்து குளிர வைத்து எடுத்தால், சுவையான தேங்காய் ஐஸ்கிரீம் தயார்..Explore