உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் புரதம் நிறைந்த பழங்கள்!
credit: freepik
அவகோடா: ஒரு கப் அவகோடா 3 கிராம் அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. மேலும் நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ, கே நிறைந்து காணப்படுகிறது.
credit: freepik
கொய்யாப்பழம்: வைட்டமின் சி நிறைந்த இந்தப் பழம், ஒரு கோப்பைக்கு 4 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.
credit: freepik
கிவி: இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது ஒரு கோப்பைக்கு 2 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.
credit: freepik
மாதுளை: வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படும் மாதுளை, 100 கிராமுக்கு 1.7 கிராம் புரதத்தை வழங்குகிறது.
credit: freepik
சர்க்கரை பாதாமி: ஆப்ரிகாட்ஸ் என அறியப்படும் இந்தப் பழத்தில் வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது. 100 கிராம் அளவிலான இந்த பழம் 1.4 கிராம் புரதத்தை வழங்குகிறது.
credit: freepik
கிரேப் புரூட்: ஆரஞ்சு பழம் போன்று தோற்றமளிக்கும் இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. ஒரு கோப்பைக்கு 1.3 கிராம் புரதத்தை தருகிறது.
credit: freepik
வாழைப்பழம்: இதில் ஒவ்வொரு கோப்பையிலும் 1.6 கிராம் அளவிலான புரதம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி6, சி, மெக்னீசியம், நார்ச்சத்துகள் உள்ளன.
credit: freepik
செர்ரி பழம்: ஒரு கப் செர்ரி பழத்தில் 1.6 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.