குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தித்திப்பான தேங்காய் பால் பணியாரம்!

தினத்தந்தி

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சுவையாக செய்து கொடுக்க ஏற்றது தேங்காய் பால் பணியாரம். இனிப்பும் மணமும் நிறைந்த இந்த பணியாரத்தை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப், வெல்லம் – ¾ கப், தேங்காய் பால் – 1 கப், ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

செய்முறை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

அதனுடன் தேங்காய் பால், ஏலக்காய்த் தூள், உப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு இட்லி மாவை விட சற்று தளர்வாக இருக்க வேண்டும்.

பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். பின்னர் மாவை ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.

ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் பொன்னிறமாக வேகவிடவும்.

இப்போது சுவையான, தித்திப்பான தேங்காய் பால் பணியாரம் தயார்.

பணியாரத்தை இன்னும் சுவையாக மாற்ற, மாவில் நசுக்கிய வாழைப்பழம் ஒன்றை சேர்த்து செய்தால் மென்மையாகவும், இயற்கையான இனிப்புடனும் இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி?