5 நிமிடத்தில் ரெடி ஆகும் சுவையான வெஜ் சாண்ட்விச்!

தினத்தந்தி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் வெஜ் சாண்ட்விச் செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் – 4, வெண்ணெய் – 1 முதல் 2 டீஸ்பூன், மயோனைஸ் அல்லது புதினா சட்னி – 2 டீஸ்பூன், தக்காளி – 1 (வட்டமாக நறுக்கியது), வெள்ளரி – 1 (வட்டமாக நறுக்கியது), வெங்காயம் – 1 (வட்டமாக நறுக்கியது), வேகவைத்த உருளைக்கிழங்கு – 1, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – சிறிதளவு.

தயாரிப்பு: பிரெட் துண்டுகளின் ஓரங்களை (edges) வெட்டி நீக்கிக்கொள்ளலாம் அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.

பிரெட் துண்டுகளில் வெண்ணெய் (Butter) மற்றும் புதினா சட்னி அல்லது மயோனைஸ் (Mayonnaise) தடவவும்.

மெலிதாக நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு, கேப்சிகம் மற்றும் சீஸ் துண்டுகளை பிரெட் மீது ஒழுங்காக அடுக்கவும்.

தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் அல்லது சாட் மசாலா தூவவும்.

மற்றொரு பிரெட் துண்டால் மூடி, டோஸ்டர் அல்லது வெண்ணெய் தடவிய தவாவில் மிதமான தீயில் வைத்து, இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து சூடாக பரிமாறவும்.

கேரளா பேமஸ் இறால் மொய்லி செய்வது எப்படி?