தினத்தந்தி
தேவையான பொருட்கள்: இறால் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி -1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிது, பூண்டு - 4 பல், கறிவேப்பிலை - தேவையான அளவு, தேங்காய் பால் - 2 கப் (முதல் பால்), மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மல்லித் தூள் - 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு/வினிகர் - 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - கால் கப் ஆகியவை.
செய்முறை: இறாலை நன்கு சுத்தம் செய்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை கீறி வைக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இறால் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
இறால் நிறம் மாறியதும் தூள் வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.
பின்னர் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
பின்பு தேங்காய் பாலை சேர்க்கவும். நுரைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். சுவையான இறால் மொய்லி தயார்.