ஒரு கைப்பிடி பிஸ்தா… பல ஆரோக்கிய நன்மைகள்!

தினத்தந்தி

பிஸ்தா நீண்ட காலமாகவே உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும் முக்கிய உணவுப் பொருளாக பார்க்கப்படுகிறது.

இதில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற பல தாதுக்கள் உள்ளன.

பிஸ்தா கொட்டைகளில் உள்ள வைட்டமின் இ மூளைக்கு பல நன்மைகளை அளிக்கிறது. மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்க உதவுவதால், மூளை பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

உயர் ரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் பிஸ்தாவை உட்கொள்ளும் போது, அது இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுவதுடன், உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

பிஸ்தா ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இதய நோய் அபாயம் குறையலாம்.

பிஸ்தாவில் நார்ச்சத்தும் நிறைவான புரதமும் இருப்பதால், இதை சாப்பிட்ட பிறகு வயிற்றில் பசி உணர்வு நீண்ட நேரம் ஏற்படாது. இதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பிஸ்தாவில் கரோட்டினாய்டுகள், லுடெயின் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை கருவிழி சிதைவை தடுக்கவும், கண் தேய்மானம் மற்றும் கண் புரை போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் உதவக்கூடும்.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் இ, சருமத்தின் வயதான தோற்றத்தை தள்ளிப்போட உதவுகிறது. மேலும் பிஸ்தா சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது

அடடே..! பூசணிக்காயில் இத்தனை ஆரோக்கிய ரகசியங்களா?