அடடே..! பூசணிக்காயில் இத்தனை ஆரோக்கிய ரகசியங்களா?

தினத்தந்தி

பூசணிக்காய் மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். இதில் பல்வேறு சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

கண் பார்வையை மேம்படுத்தும் : பூசணிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்தி கண் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : இதில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களைத் தடுப்பதில் உதவுகின்றன.

செரிமானத்தை சீராக்கும் : நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையும் குறையும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் : இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் : பூசணிக்காயில் குறைந்த கலோரி கொண்டதால் உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் உணவில் சேர்க்கலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது : பூசணிக்காயில் உள்ள சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

உடல் சூட்டை குறைக்கும் : பூசணிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவாகவும் கருதப்படுகிறது.

பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்?