தினத்தந்தி
காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், கீரைகள், பீட்ரூட், கொண்டைக்கடலை, வேகவைத்த சிக்கன், முட்டை போன்ற உங்களுக்குப் பிடித்த பல்வேறு உணவுப் பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான சாலட் வகைகளை மிக எளிதாக வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம்.
விதவிதமான நிறங்களில் உள்ள காய்கறிகளை சேர்த்து சாலட் செய்வது, அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை மேலும் அதிகரிக்கிறது.
தினமும் ஒரு கப் அளவு சாலட்டை எடுத்துக் கொண்டால் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K, மினரல்கள், புரதச்சத்து, நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் போன்ற அனைத்து முக்கிய ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
காய்கறிகளில் உள்ள நைட்ரேட், ஜீரணமாகும் போது நைட்ரிக் ஆக்சைடாக மாறி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய் அபாயங்கள் குறைகின்றன.
கேரட், பீட்ரூட், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் அதிகமான கொலஸ்டிராலை குறைக்கவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், ஜீரணத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நைட்ரேட் சத்து தசைகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் முட்டைகோஸ், லெட்யூஸ் போன்றவற்றில் உள்ள பொட்டாசியம் தசைகளை வலுப்படுத்தி வலி மற்றும் பலவீனத்தை குறைக்கிறது.
காய்கறிகள், பீன்ஸ், காலிஃபிளவர், ப்ரக்கோலி, முட்டைகோஸ் போன்றவை குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்து கொண்டவை. இவை உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன.
சாலட் வகைகள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக நீரிழிவு உள்ளவர்கள் வெங்காயம், லெட்யூஸ், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து தினமும் சாப்பிடலாம்.
வைட்டமின் A, C, K நிறைந்த காய்கறிகள் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
வெள்ளரிக்காய், தக்காளி, செலரி போன்ற காய்கறிகளில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால் சருமம் ஈரப்பதமாக இருக்கும். மேலும் வைட்டமின் C சருமத்தை பாதுகாத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.