புற்றுநோய் தடுப்பில் பூண்டின் பங்கு என்ன?

தினத்தந்தி

நாம் சமையலில் தினமும் பயன்படுத்தும் பூண்டில் ஏராளமான நன்மைகள் காணப்படுகின்றன. பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் புற்றுநோயிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு வரை நமக்கு பல பயன்களை தருகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.

பூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டுமல்ல. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் இதில் நிறைந்துள்ளன.

பூண்டை நம் உணவில் சேர்த்து வருவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வரலாற்று ரீதியாக பூண்டு நோய்களைத் தடுக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைத்து, தமனி விறைப்பு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.

பூண்டிற்கு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பூண்டில் உள்ள இயற்கை சேர்மங்கள் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்க உதவுகின்றன. மேலும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது. வயிறு, தொண்டை, புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூண்டு நமது மூளை நியூரான்களை பாதுகாக்க உதவுகிறது. இதனால் அறிவாற்றல் குறைபாட்டை குறைத்து, கற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

பூண்டு ஒரு புரோபயாட்டிக் உணவாக இருப்பதால், குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. வயதான பூண்டு சாறு குடலில் உள்ள நல்ல பாக்டீரியா செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பூண்டு கீல்வாதம் போன்ற மூட்டு பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது. வயதானவர்களை பாதிக்கும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

காலையில் இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!