தினத்தந்தி
கேரளாவை சேர்ந்த இவர் ‘பட்டதாரி’ திரைப்படத்தின் மூலம் ‘அதிதி மேனன்’ என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் தனது பெயரை ‘மிர்னா மேனன்’ என மாற்றிக் கொண்டு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்துவருகிறார்.
‘களவாணி மாப்பிள்ளை’, ‘புர்கா’, ‘பிக் பிரதர்’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ஸ்டைலிஷ் போட்டோஷூட்களை செய்து, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.