தினத்தந்தி
16 வயதிலேயே சினிமா உலகில் அடியெடுத்து வைத்து, இன்று முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா.
‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து, பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள தமன்னா, தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.