வயது 14.. சாதனைகள் பல.. யு19 உலகக்கோப்பையில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி!

தினத்தந்தி

2011ஆம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி, தன்னுடைய கிரிக்கெட்டை மிகவும் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டார்.

photo: BCCI

14 வயதில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிவருகிறார் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது முதலே, இன்று வரை ரசிகர்களுக்கு பிரம்மிப்பை கொடுத்துவருகிறார்.

photo: BCCI

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இளையோர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

photo: BCCI

இந்த போட்டியில் வெறும் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் உட்பட 175 ரன்கள் குவித்து பல்வேறு வியப்பூட்டும் சாதனைகளை படைத்துள்ளார்.

photo: BCCI

சூர்யவன்ஷியின் 175 ரன்கள், சீனியரோ அல்லது ஜூனியரோ ஒட்டுமொத்த ஐ.சி.சி. இறுதிப்போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது.

photo: BCCI

இளையோர் ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற சாதனைக்கும் (15 சிக்சர்) சொந்தக்காரர் ஆனார்.

photo: BCCI

இளையோர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் சூர்யவன்ஷி 10-க்கு மேல் சிக்சர் அடிப்பது இது 5-வது முறையாகும். மற்ற பேட்டர்கள் அனைவரும் சேர்ந்தே 3 முறை தான் இவ்வாறு அடித்திருக்கிறார்கள்.

photo: BCCI

சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதத்தை ருசித்தார். இளையோர் உலகக் கோப்பையில் ஒரு வீரரின் 2-வது மின்னல் வேக சதம் இதுவாகும். இதே உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் வில் மலாஜ்சுக் 51 பந்தில் சதம் எடுத்ததே சாதனையாக உள்ளது.

photo: BCCI

சூர்யவன்ஷி சிக்சர், பவுண்டரிகள் மூலம் மட்டுமே 150 ரன்கள் திரட்டி விட்டார். இளையோர் போட்டியில் இதுவும் ஒரு சாதனையாகும்.

photo: BCCI
என்னது முருங்கை பிசினில் இவ்வளவு நன்மைகளா?