வாகனப் புகையால் அதிகரிக்கும் காற்று மாசு..!

தினத்தந்தி

உலகம் முழுவதும் தற்போது காற்று மாசுபாடு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சுப் புகைகள் கூறப்படுகின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை அருகிலுள்ள பகுதிகளை பாதித்தாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதன் புகை உலகளவில் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பெருநகரங்களில் வாகனப் பயன்பாடு அதிகரித்து வருவதால் காற்று மாசும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

காற்றில் கார்பன் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் அதிகரிப்பது மனிதர்களின் உடல்நலத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.

வாகனப் புகையை அதிகமாக சுவாசிப்பவர்களுக்கு அலர்ஜி, சுவாச பிரச்சினை, காசநோய் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆய்வுகளின்படி அதிக மாசு நிறைந்த பகுதிகளில் வாழ்பவர்களின் உடலில் தீங்கு விளைவிக்கும் நுண்துகள்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

சில வாகன நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அதிக புகை வெளியிடும் வாகனங்களை தயாரிப்பதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு வீட்டிற்கு ஒரு வாகனம் என்ற நடைமுறையை பின்பற்றுவதும், மெட்ரோ ரெயில் மற்றும் பொது போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துவதும் காற்று மாசை குறைக்க உதவும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். வாகனப் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, மாசில்லா வாழ்க்கை முறையை பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாகும்.

உஷார்..வாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து!