தினத்தந்தி
உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது சிறிதளவு புளிப்பில்லாத கெட்டித்தயிர் சேர்த்து வதக்கினால் கூடுதல் சுவை கிடைக்கும்.
பொரி உருண்டை செய்வதற்கு முன் அவல் பொரியை வெறும் வாணலியில் லேசாக சூடு செய்து பயன்படுத்தினால் மொறு மொறுப்பாக இருக்கும்.
புதினா அதிகமாக கிடைக்கும் காலங்களில் வாங்கி உலர்த்தி சேமித்து வைத்துக்கொள்ளலாம். மசாலா உணவுகளில் சேர்த்தால் நல்ல மணமும் சுவையும் தரும்.
பொரித்த அப்பளம் நமுத்து போகாமல் இருக்க சூடு ஆறிய பிறகு ஸ்டீல் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம்.
பக்கோடா மாவில் சிறிதளவு நெய் மற்றும் உப்பு கலந்த தயிர் சேர்த்து கலந்தால் பக்கோடா மொறு மொறுப்பாக வரும்.
சாதம் உதிரியாக வர அரிசி வேகும் போது சில துளி எண்ணெய் சேர்க்கலாம்.
வெங்காயத்தை நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
ரசத்திற்கு அதிக மணம் கிடைக்க இறுதியில் கொத்தமல்லி மற்றும் நெய் சிறிதளவு சேர்க்கலாம்.