தினத்தந்தி
பர்கர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமாகவும் சுவையாகவும் வெஜ் பர்கர் செய்து சாப்பிடலாம்.
இந்த வெஜ் பர்கருக்கு பன், காய்கறிகள், சீஸ் மற்றும் தக்காளி சாஸ் போன்ற எளிய பொருட்களே போதுமானது. வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்.
முதலில் கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பொடி, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்னர் காய்கறிகள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளற வேண்டும்.
அதன்பின் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கட்லெட் போல வட்டமாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பன்னை இரண்டாக வெட்டி அதன் நடுவில் காய்கறி கட்லெட்டை வைத்து, மேலே சீஸ், முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் வெங்காய துண்டுகளை அடுக்க வேண்டும்.
இறுதியாக தக்காளி சாஸ் சேர்த்து பன்னின் மற்றொரு பகுதியை மேலே வைத்து பரிமாறினால் சுவையான வெஜ் பர்கர் தயார்.
மாலை நேர ஸ்நாக்ஸாகவும், குழந்தைகளின் டிபன் பாக்ஸிற்கும் இந்த வெஜ் பர்கர் சிறந்த தேர்வாக இருக்கும்.