தினத்தந்தி
தற்போதைய பொருளாதார சூழலில் செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக மளிகைப் பொருட்கள் வாங்கும்போது திட்டமிட்டு செயல்பட்டால் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து சத்தான உணவுகளை தேர்வு செய்தால் செலவையும் குறைக்கலாம், உடல்நலத்தையும் பாதுகாக்கலாம்.
மளிகைப் பொருட்கள் வாங்கும் முன் தேவையான பொருட்களின் பட்டியலை தயார் செய்தால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும்.
அங்காடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை முன்கூட்டியே பார்த்து வாங்கினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
தயாரான உணவுகளை வாங்குவதை விட வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது சிக்கனமானது. தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கினால் அடிக்கடி செலவாகும் சிறு தொகைகளை குறைக்க முடியும்.
வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்து பயன்படுத்துவது செலவைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் உணவுப் பொருட்களை சரிபார்த்து பழையவற்றை முதலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உணவு வீணாகாது.
பசியாக இருக்கும் போது கடைக்கு செல்ல வேண்டாம். தேவையற்ற பொருட்களை வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
பருவ காலங்களில் கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை வாங்குவது மலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.