தினத்தந்தி
பழங்களை பொறுத்தவரை உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்வதாக இருந் தாலும் மாதவிடாய் காலத்தில் சரியான பழங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சில பழங்கள் அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த பழங்கள் சிலருக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி மாதவிடாய் காலத்தில் அசவுகரியத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.
பச்சை பப்பாளி:பச்சை பப்பாளியில், கருப்பை சுருக்கங்களைப் பாதிக்கக்கூடிய சில வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. இதை அதிக அளவில் உட்கொள்வது வயிற்றுத்தசைப்பி டிப்புகளை அதிகரிக்கக்கூடும்.
உலர் பழங்கள்: உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்களில் இயற்கையான சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் சர்க்கரை அதிகம் உட்கொள்வது வயிறு உப்புசத்தையும், வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வை யும் ஏற்படுத்தக்கூடும்.
இனிப்பு சத்து கொண்ட பழங்கள்: அதிக இனிப்பு சத்து கொண்ட பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக வேகமாக அதிகரிக்க செய்துவிடும். அதனால் மனநிலை மாற்றம், சோர்வு உண்டாகக்கூடும். மாதவிடாய் காலத்தில் இவ்வகை பழங்களை குறைவாக உட்கொள் வதே நல்லது.
குளிர்ந்த பழங்கள்: சிலருக்கு குளிர்ந்த பழங்கள் வயிற்றில் கனமான உணர்வை ஏற்படுத்துவதுடன், செரிமானச் செயல்முறையையும் மந்தமாக்கக்கூடும். எனவே பிரிட்ஜில் வைத்து குளிரூட்டப்பட்ட பழங்களை விட, சாதாரண அறை வெப்பநிலையில் உள்ள பழங்களை உட்கொள்வதே நல்லது.
சாப்பிட வேண்டியவை: மாதவிடாய் காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். காரமான, பதப்படுத்தப் பட்ட மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிருங்கள். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்கறிகள் மற்றும் புரதங்களை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.
அதிகமாக உட்கொண்டால்: மாதவிடாய் காலத்தில் ஏதேனும் ஒரு உணவின் மீது தீராத ஆசை உண்டாகும். குறிப்பாக இனிப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வயிறு உப்புசம் மற்றும் மனநிலையை மோசமாக்கும்.